57. கோட்புலி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 57
இறைவன்: இரத்தினபுரீஸ்வரர்
இறைவி : கமலாம்பிகை
தலமரம் : மாவிலங்கை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருநாட்டியத்தான்குடி
முக்தி தலம் : திருநாட்டியத்தான்குடி
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - கேட்டை
வரலாறு : சோழ நாட்டில் திருநாட்டியத்தான்குடி என்னும் பதியில் அவதாரம் செய்தவர். மன்னரது படைத் தலைவராய் விளங்கியவர். தாம் பெறும் ஊதியத்தில் செந்நெல் வாங்கி சிவபெருமானுக்கு என சேகரித்து வைத்தார். ஒரு சமயம் மன்னர் ஆணைப்படி போர்க்களம் செல்ல வேண்டியிருந்ததால் நெல்லை சிவபெருமானுக்கு மட்டும் படைக்க வேண்டும் என்று சொல்லிப் போனார். அவர் சென்ற பிறகு நாட்டில் பஞ்சம் ஏற்படவே அவரது சுற்றத்தார் இறைவனுக்கு என்று வைத்திருந்த நெல்லை எடுத்து தம் செலவுக்குப் பயன் படுத்திக் கொண்டனர். நாடு திரும்பிய நாயனார் நடந்தவற்றை அறிந்து கோபம் கொண்டார். சுற்றத்தினர் அனைவரையும் ஒரு குழந்தையையும் கொன்றார். இறுதியில் சிவபதம் அடைந்தார்.
முகவரி : அருள்மிகு. மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி, (வழி மாவூர்)– 610202 திருவாரூர்மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04367-237707, அலைபேசி : 9443806496

இருப்பிட வரைபடம்


எல்லோரும் புகுந்ததற்பின் இருநிதியம் அளிப்பார்போல்
நல்லார்தம் பேரோன்முன் கடைகாக்க நாதன்தன்
வல்லாணை மறுத்தமுது படியழித்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ எனக்கனன்று கொலைபுரிவார்.

- பெ.பு. 4146
பாடல் கேளுங்கள்
 எல்லோரும்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க